திருமலையில் விபத்து மூவர் படுகாயம்!

 


திருகோணமலை-தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட -உட் துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து இன்று (03) பிற்பகல் 1 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான திருகோணமலை -ஜமாலியா-நெல்சன் புற பகுதியைச் சேர்ந்த  பரீஸ்தீன் (37வயது) காயம் அடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த  உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال