நிலாவெளி கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன மற்ற இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது


திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது.


இவ்வாறு காணாமல் போனவர் யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச த்தில் உள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திர ராசா சிந்துஜன் (21 வயது) எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோமலை நோக்கி 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு நிலாவெளி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நிலாவெளி கடலில் குளிப்பதற்காக சென்ற போது நீரில் மூழ்கி ஒருவருடைய சடலம் நேற்று மீற்கப்பட்டது.

 இந்நிலையில் மற்ற இளைஞருடைய சடலம் தேடப்பட்டு வந்த நிலையில் இவருடைய சடலம் இன்று 13ஆம் தேதி மாலை கரையொதுங்கி உள்ளதாகவும் இவரது சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.