(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கடற்படை சிப்பாயிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.
வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறைக்காக வருகைதந்த மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த இவர் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் திருகோணமலை - மஹதிவுல்வெவ, புபுதுபுர பகுதியைச் சேர்ந்த (26வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த கடற்படை வீரருடன் தொடர்பு வைத்திருந்த 60 குடும்பங்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும், இந்நிலையில் கடற்படை வீரரின் தந்தை சிவில் பாதுகாப்பு படை வீரர் எனவும் அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் மொரவெவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
No comments