Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிண்ணியாவில் மணல் ஏற்றச்சென்ற இளைஞர் ஆற்றில் விழுந்து மாயம்!

(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை - கிண்ணியா சோலைவெட்டுவான் பகுதியில் மணல் ஏற்றச்சென்ற இளைஞரொருவர் ஆற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் 
நீர் எடுக்க வந்தவர்களை  கண்டு பொலிஸார் வருவதாக ஆற்றில் பாய்ந்த போது நீரில் மூழ்கியுள்ளார் என அவருடன் மணல் ஏற்றியவர்கள் தெரிவித்தார். 


இவ்வாறு நீரில் மூழ்கியவர் - கிண்ணியா, மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த யூனைதீன் பாஹிம் (21) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

ஆற்றில் மூழ்கிய இளைஞனை மீட்கும் பணியில்  பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

கிண்ணியா பொலிஸார் இது  தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments