கிண்ணியாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி மரணம்!

 


திருகோணமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.கிண்ணியா பெண்கள் மகளிர் கல்லூரியில் இரண்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் கிஷோர் ஷம்ஹா  மரியம் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

2 நாட்கள் காய்ச்சல் காரணமாக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.