Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது-


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் கஞ்சா மரத்தை வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்றிரவு (10) கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை-எட்டாம் கொலனி பகுதியைச் சேர்ந்த  முகம்மட் அசூர் (39 வயது) நபர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் விஷேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போது வீட்டு வளாகத்தில் நாலடி உயரமான கஞ்சா மரம் நாட்டப்பட்டு இருந்ததாகவும் அதனையடுத்து குறித்த வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.

No comments