(அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தானை -வவுனியா பிரதான வீதியில் டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (11) 10-55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தில் விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றும் ஹொரவ்பொத்தானை -ரிட்டிகஹவெவ பகுதியைச் சேர்ந்த எம்.அனுலா குமாரி (56வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த WP NB3308 என்ற சிடிபி பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மற்றும் மனைவி டிப்பர் வாகனத்தில் சிக்கி பஸ்ஸின் சில்லுக்குள் சிக்குண்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த பெண் உயிரிழந்த நிலையில் கணவர் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள் இல்லை :
Post a Comment