திருமலையில் விபத்து இருவர் படுகாயம்! ( VEDIO இணைப்பு)

 (பதுர்தீன் சியானா)


திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் டிப்பர் வாகனம் துடன் முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் இன்று (27)  1. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கன்னியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வேகமாக வந்த முச்சக்கரவண்டி நேராக வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில்  இவ்விபத்து இடம்பெற்றதாகவும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை- மட்டிக்களி, ராஜவரோதய சதுக்கம் பகுதியைச் சேர்ந்த மதிவண்ணன் ஜதுர்ஷன் (19 வயது) மற்றும் உவர்மலை மத்திய வீதியைச் சேர்ந்த ஜீவராசா 
கலை நேசன் (24வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.


இது விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ள நிலையில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனத்துடன் மோதியதினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.