திருகோணமலையில் நினைவேந்தலுக்கு தடை!

 


(பதுர்தீன் சியானா)

திருகோணமலை-சிவன் கோயில் முன் பகுதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் சட்டவிரோதமாக பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையினை திருகோணமலை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
 
திருகோணமலைத பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ராஜபக்ச அவர்கள் மூலம் இன்று (26) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது.

பொதுமக்கள் கூடுவதினால் சுகாதாரம் மற்றும் மனித உயிர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் திருகோணமலை நீதிமன்றில் தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது.


இந்நிலையில் திருகோணமலையில் வசித்துவரும் ராமநாதன் ஸ்ரீ ஞானேஸ்வரன் (கண்ணன்) மற்றும் ஜெயலக்ஷ்மி அல்லது ஆசா  என்று அழைக்கப்படும் இருவருக்குமே 
இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குற்றவியல் நடவடி சட்டக் கோவையின் 106 (01) பிரிவின் கீழ் இத்தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது.

இன்று 26ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் வரை திருகோணமலை சிவன் கோயில் முன் பகுதி மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன் சட்டவிரோதமாக பொதுமக்கள் கூடுவதற்கும் அவ்வாறு பொதுமக்கள் கூடுவதினால் சுகாதாரம் மற்றும் மனித உயிர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் இத்தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவினை திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா  குமாரி ரத்நாயக்க வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.