திருகோணமலை மாவட்ட காணி பிரச்சினைகளுக்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களமே காரணம்-இம்ரான் எம்.பிதிருகோணமலை மாவட்ட காணி பிரச்சினைகளுக்கு வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களமே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


 இன்று (27) வெள்ளிக்கிழமைற்ற காணி அமைச்சு தொடர்பான  வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


திருகோணமலை மாவட்ட மக்களால் முன்வைக்கப்படும் காணி பிரச்சினைக்கள்   பலவற்றுக்கு இரண்டு திணைக்களங்களே காணரமாக உள்ளதாக மக்கள் குற்றம்  சாட்டுகின்றனர். 

வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம். 


கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆயிலடி கிராம சேவகர் பிரிவில் 50 வருடங்களுக்கு மேலாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்த நவ்சா உம்மா மற்றும் அப்துல் சத்தார் காசிம் பாவா ஆகியோர் தமது வயல்காணியின் மேட்டுநிலத்தை துப்பரவு செய்யும்போது அக்காணி தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணி என அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வந்த காணி எவ்வாறு இப்பொழுது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமாக முடியும். 


குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காசிம் நகர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள 

பொய்கைகுளம் ,சுரிப்பிளவு  ,கைநாட்டான் ,ஆலம் குளம்,முள்ளிவட்டான் வயல்கள் வனவிலங்கு திணைக்களத்துக்கு சொந்தமானது என  எல்லையிடப்பட்டுள்ளது. 

புல்மோட்டை பிரதேசத்தில் அரிசி மலை பகுதி,பொண்மலைக்குடா ,ஆண்டாங்குள வயல் பகுதி,யான் ஓயா அணைக்கட்டு,காட்டுத்தெண்ணை முறிப்பு,கண்ணீர்ஆவி மலை,13 ம் கட்டை மாலாநூர்,மண்கிண்டி மலை பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.


இதுவரைக்கும் பன்னிரெண்டாயிரத்துக்கும்(12000)  மேற்பட்டவர்கள் காணி அனுமதி பத்திரம் கோரி விண்ணப்பித்தும் அவைகள் அனைத்தும் குச்சவெளி பிரதேச செயலகத்தில் தேங்கி இருப்பதாக மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.


இது தவிர மூதூர்,தோப்பூர் என பல பகுதிகளிலும் இந்த பிரச்சினையே உள்ளது.

மக்கள் பயிர் செய்யும் காணிகளில் மக்களின் உறுதி காணிகளில் திடீரென இவர்கள் வந்து இது தமது இது தமது திணைக்களத்துக்கு சொந்தமான காணி என எல்லையிடுகின்றனர். 

இது தொடர்பாக அந்த பிரதேச செயலாளருக்கோ காணி உத்தியோகத்தருக்கோ எதுவித தகவலும் தெரியாது என கூறுகின்றனர். 

ஒருவர்  பரம்பரை பரம்பரையாக பராமரிக்கும் பயிர்செய்யும் உறுதி காணி எப்படி இவர்களுக்கு சொந்தமாக முடியும். ஆகவே இதற்குரிய தீர்வை அமைச்சர் முவைக்க வேண்டும். 


இது தவிர புடவைக்காடு முஸ்லீம் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணி மணல் அகல இல்மனைட்  கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது . எந்த அடிப்படையில் இந்த காணி மணல் அகழ்வுக்கு வழங்கப்பட்டது. 


எமது மாவட்டத்தில் இன்னொரு பிரச்சினையாக காணப்படுவது பிரதேச செயலகங்களுக்குரிய எல்லைகள்   இன்னமும் உரியமுறையில் அடையாளப்படுத்தப்படவில்லை.

அதனால் சில பிரதேச செயலக காணிகள் இன்னொரு பிரதேச செயலாகத்தால் அத்துமீறி பிடிக்கும் நிலை காணப்படுகிறது. 

உதாரணமாக கிண்ணியா, மூதூர், தம்பலகாமம்,   சேருவில பிரதேச செயலகத்தின் இப்போதுள்ள காணியின் அளவையும் 30 வருடங்களுக்கு முன் உள்ள காணியின் அளவையும் பார்த்தால் இதன் உண்மை தன்மை தெரியும், 

எனவே உடனடியாக பிரதேச செயலக எல்லைகளை அடையாளப்படுத்த வேண்டும்.


திருகோணமலை மாவட்டத்தில் இன்னமும் மேய்ச்சல் தரை இல்லாததால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்  எனவே மேய்ச்சல் தரைக்கான இடத்தையும் அடையாளப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget