திருகோணமலை வாக்கெண்ணும் நிலையத்தில் பதட்ட நிலை!

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும்  மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் 2. 15 மணி அளவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் செல்ல முற்பட்ட வேளை பொலிசார் அவரை தடுத்தனர் இந்நிலையில் குறித்த வேட்பாளர் உரிய இடத்துக்கு வருகை தந்து உள்ளே நுழைய முற்பட்ட போதும் அவரை பொலிஸார் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பியந்த பத்திரனை என்பவரே  இவ்வாறு வெளியேற்ற பட்டதும் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.