கந்தளாயில் பாவனைக்கு உதவாத கிழங்கு மற்றும் வெங்காயம் மீட்பு - இருவர் கைது

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-அக்போபுர பகுதியில் பாவனைக்கு உதவாத கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற பொருற்களுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக  அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ள பகுதியிலிருந்து லொறி ஒன்றில் வெங்காயம் 2 ஆயிரம் கிலோ மற்றும் கிழங்கு போன்றவற்றை  கொண்டு வந்த போது வாகனத்தை சோதனையிட்டபோது பாவனைக்கு உதவாத பொருட்கள் என கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து இவர்கள் இருவரையும் நேற்றிரவு (06) கைது செய்ததாகவும் இதேவேளை பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.