சிகை, அழகுக்கலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை பட்டணமும் சூழலும் 
பிரதேச சபை  மற்றும்  உப்புவெளி  சுகாதார வைத்திய அதிகாரி  (MOH) பிரிவிற்குட்பட்ட சிகை அலங்கரிப்பு நிலைய மற்றும் அழகுக்கலை நிலைய உறுமையாளர்களுக்கான அறிவுறுத்தற்கூட்டம் இன்று (10) நடைபெற்றது. 

திருகோணமலை பட்டணமும் சூழலும் 
பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான 
மண்டபத்தில்  இடம்பெற்றது.
 

இதன் போது எதிர் வரும் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப் படும் போது எவ்வாறு சுகாதார முறையில் நடந்து கொள்ள வேண்டும்  என்று  உப்புவெளி  சுகாதார வைத்திய அதிகாரி  வைத்திய கலாநிதி ருத்ரா மற்றும் பொது சுகாதார அதிகாரிகளினால் விளக்கமான அறிவுரை வழங்கப் பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال