தமிழகத்தில் ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 7204 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 6535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 3330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மாலை  ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 509 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 43 பேருக்கும், திருநெல்வேலி மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 10 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் 13367 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 243037 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 12962 தனிநபர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 232368 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக அதிகபட்சமான பரிசோதனை நடத்திய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதுவும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.


இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 53 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 5,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,367 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 669 பேருக்கு தொற்று உறுதியானது.

சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4,907 ஆண்கள், 2,295 பெண்கள், 2 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

கொரோனா அறிகுறி உள்ள 4,305 பேர் மருத்துவமனைகளில் தனிவார்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தை மூலம் 204 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.விழுப்புரத்தில் 6, செங்கல்பட்டில் 43, பெரம்பலூரில் 9, திருவள்ளூரில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது) 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.