திருகோணமலை மாவட்ட எல்லைக்குக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்அசங்க அபேவர்தனவின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கமைய கிருமித்தொற்று நீக்கி செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இரானுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் இச்செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்குரிய கிருமித்தொற்று நீக்கி விசிறும் இயந்திரம் மற்றும் அதற்குரிய செலவினங்களை மாவட்ட செயலகம் வழங்கி வருகின்றது.
மாவட்டத்திக்கு உள்நுழையும் சகல எல்லைப்புறங்களிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதன் மூலம் கொவிட் 19 பிற பிரதேசங்களில் இருந்து மாவட்டத்திற்கு உள்நுழைவதை தவிர்க்க முடியும்.
(அப்துல்சலாம் யாசீம்)