திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற எட்டு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தாயார் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இம்முறைப்பாட்டை அடுத்து மூதூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டி பட்டிதிடல்,விநாயகர் வீதியில் வசித்து வரும் 38 வயதுடைய தந்தையை கைது செய்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி பகல் நேரத்தில் 8 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாயார் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை தாயார் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் தாயார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் தந்தையை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments