கிண்ணியாவில் கடந்த வாரம் BBQ யினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது சுகாதாரத் திணைக்களம் சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் நோக்கில் பல்வேறுபட்ட விதத்தில் சுற்றி வளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹோட்டல்கள், சில்லறை கடைகள், மற்றும் பழங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் போன்றவற்றை தீவிரமாக சோதனை இட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க பிரதிப் பணிப்பாளர் வீ.பிரேமானந் ஆகியோர்களின் வழிகாட்டலின் கீழ்
கிண்ணியா சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தலைமையில் (29) கிண்ணியா பிரதேசத்தில் மூன்று பிரிவுகளாக பிரிந்து சுகாதார பரிசோதனைகள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார விழுமியங்களை பேணாமல் சட்டங்களை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அனைத்து வியாபார ஸ்தலங்களையும் சோதனையிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments