அம்பியுலஸ் வண்டிகளில் ஏசி போடாவிட்டால் அறிவிக்கவும்


திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகளில் ஏசி போடாமல் நோயாளர்களை  ஏற்றிக் கொண்டு வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


தற்பொழுது அதிக வெப்பநிலை காரணமாக அம்பியுலஸ் சாரதிகள் தனக்கு மாத்திரம் ஏசியை போட்டுக் கொண்டு பின்புறமாக இருக்கின்ற நோயாளர்களுக்கு ஏசி போடுவதில் என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக திருவண்ணாமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தருக்கும் குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரியக் கிடைத்துள்ளது.

எனினும் தமது வருமானத்தைக் கூட்டிக் கொள்ளும் நோக்கில் சில  அம்பியூலன்ஸ் சாரதிகள் ஏசி போடாமல் அதிக வெப்பத்தில் நோயாளர்களை  ஏற்றிக் கொண்டு வருவதையும் அவதானித்துள்ளனர்.

ஆகவே இனி வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் நோயாளர்களுக்கு வருவதை தடுக்கும் நோக்கில் அனைத்து அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கும்  நோயாளர்களை ஏற்றி வரும் போது ஏசி  போடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் இனிவரும் காலங்களில் சாரதிகள் ஏசி போடாமல் நோயாளர்களை ஏற்றி வந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال