திருகோணமலை- பொரலுகந்த தனிநபருக்கு சொந்தமான காணியில் விகாரை அமைக்க முடியுமா? என சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச் செயலாளர் குகதாஸ் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விகாரை தொடர்பில் இன்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில் 01.அரச காணியினை குத்தகைக்கு வழங்குவது சம்பந்தமாக குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட வில்லை.
02. பிரதேச செயலாளர் - பிரதேசசபை - U.D.A - Forost Department - சுற்றாடல் அதிகாரசபை - தொல்லியல் திணைக்களம் - நில அளவைத் திணைக்களம் - தொகை மதிப்பு திணைக்களம் ஆகியோரின் அனுமதி பெறப்பட்டு அரசாங்க அதிபர் முன்நிலையில் காணிப்பாவனைக் கூட்டம் நடத்தப்பட்டு அனுமதி அழிக்கப்பட வேண்டும்.
03.காணிப்பாவனை அனுமதிக்குப்பின் காணி ஆணையாளர் கிழக்கு மாகாணம் - முதலமைச்சின் செயலாளர் - பிரதம செயலாளர் - ஆளுனர் - ஆகியோர் அனுமதியளித்தல் வேண்டும். 04.மேற்குறித்த அனைத்து அனுமதிகளிடமும் காணி ஆணையாளர் நாயகம் காணி அமைச்சிற்கு அனுப்பப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு காணி அமைச்சர் ஊடக அமைச்சர் அவையில் அனுமதி பெறப்பட்டு பின்னர் காணி ஆணையாளர் நாயகத்தால் வர்த்தமானி பிரசுரிக்கப்படல் வேண்டும்.
05. அதன் பின்னர் காணி 33 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு குறித்த தரப்பிற்கு அனுமதி உள்ளது என அரசாங்க அதிபர் - பிரதேச்செயலாளர் - மாகாண காணி ஆணையாளர் ஆளுனர் ஆகியோருக்கு எழுத்து மூலம் காணி ஆணையாளர் நாயகத்தால் .அறிவிக்கப்படும்.
06. பௌத்த விகாரை எனில் புத்தசாசன திணைக்களத்தில் அல்லது அமைச்சில் பதிவு செய்யப்பட்டால் மாத்திரமே காணியினைப் பெற முடியும். இவ்வாறான அனுமதிகள் எவையும் வழங்கப்படவில்லை என அறியக் கிடைத்துள்ளது.அவ்வாறு அனுமதிகள் இருப்பின் பிரதேச செயலாளர் வெளிப்படுத்த வேண்டும். எனவும் இல்லை எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றம் மூலம் இவ்விடயம் சார்பாக வழக்குத்தாக்கல் செய்து தகுந்த தீர்வினைப் பெறவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு முன்னரும் கன்னியா விகாரைக்கு வழங்கப்பட்ட காணியும் சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ளதா
வர்த்தமானி வெளியிடப்பட்டு உள்ளதா அல்லது இல்லையா என்பதனையும் பிரதேச செயலாளர் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Premium By
Raushan Design With
Shroff Templates