திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று (11.30) மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் திருமலையில் இருந்து கன்னியா நோக்கி சென்றுள்ளதாகவும், சம்பாலேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த சொகுசு காருடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கன்னியா மாங்காயூற்று பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.