திருகோணமலையில் சிறுவர்களுக்கான "Marine Mile  Challenge" என்ற தலைப்பில் நீச்சல் போட்டி

 


திருகோணமலையில் சிறுவர்களுக்கான "Marine Mile  Challenge" என்ற தலைப்பில் நீச்சல் போட்டி நடாத்தப்பட்டது.


திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலிலிருந்து சல்லி அம்மன் கோவில் வரையிலான (திருகோணமலை - சல்லி) 8 கிலோமீட்டர் தூரத்தினை நீந்தி கடக்கும் முயற்சியில் இப்போட்டி நடாத்தப்பட்டது. காலை 11.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டி மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. 

இந்த நீச்சல் போட்டியை Trinco Aid சிறந்த முறையில் நடத்துவதற்காக Manju Nishshanka - The Leader  of Global Srilankan Congress அவர்கள் தாமாக முன்வந்து நிதி உதவி வழங்கியுள்ளார். அவர்களுக்கு Trinco Aid சார்பில் மிக்க நன்றிகள். மற்றும் இப் போட்டியினை நடத்த சிறுவர்களை ஒழுங்கமைத்து சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகிறார் திரு. நந்தன விஜயலால் (Yana Foundation Director) அவர்கள். அவர்களுக்கும் எமது நன்றிகள். 

இன்றைய கடல் வழி நீச்சல் போட்டியில் 21 சிறுவர்கள் பங்குபற்றினர்.
அவர்களது பெயர் விபரம் பின்வருமாறு நிதிஷ், வருன், கோபிசன், இன்ஹாஸ், சந்துரு, விடேஸ்வர், உதேஸ், தன்வந், ஷிமர், அனிஷ், அனுஜ, கெவின், ஷஸ்விந்த், ரெக்ஸ்டன், ருக்ஷன், நிரங்க, ரஷ்மிகா, கருண்யா, டிலுக்ஸன், ஃம்ஸான், கபிஷன்.
இப்போட்டியில் T/St.Joseph's College, T/R.K.M Hindu College, T/St. Mary's College, T/Orshill Vivekananda College, T/Selvanayagapuram Hindu Maha Vithyalayam, GreenWich International College, T/Sinhala Maha Vidyalaya போன்ற பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பங்குபற்றினர்.

போட்டியின் தூரத்தினை தன்வந், ரஷ்மிகா, ஷிமர், நிரங்க,  விடேஸ்வர், ஷஸ்விந்த் ஆகிய ஆறு சிறுவர்கள் முழுமையாக கடந்து சாதனை படைத்தனர். மற்றும் சிலர் தங்களால் நீந்த முடிந்த தூரத்தினை அடைந்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். 


இப்போட்டியில் ஷஸ்விந்த் (T/Orshill Vivekananda College) முதலாம் இடத்தையும், ஷிமர் (Greenwish International College) இரண்டாம் இடத்தையும், தன்வந் (T/R.K.M Hindu College) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும், பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதல் இடத்தை பெற்ற நீச்சல் வீரருக்கான கேடயத்தினை திரு. சித்திரவேலாயுதம் வீரசுதாகரன் (செயலாளர், வாகரை பிரதேச செயலகம்) அவர்களும், இரண்டாவது நீச்சல் வீரருக்கான கேடயத்தினை திரு. நந்தன விஜயலால் (Yana Foundation Director) அவர்களும், மூன்றாவது நீச்சல் வீரருக்கான கேடயத்தினை திருமதி. தயாளினி ஹரிஹரன் (Director of Trinco Aid) மற்றும் திரு. செல்வேந்திரன் (Director of Guna Institution) ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது.


இறுதி நிகழ்வாக சல்லி கிராம மக்கள் இவ் வீரர்களை வரவேற்று, சல்லி கிராம மக்கள் சார்பில் திரு. ரவி அப்பா தலமையில் தேனீர் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கோவிலில் இவ் வீரர்களுக்கான வழிபாடுகளை செய்து, அம்மனுக்கு சாத்திய பட்டு ஆடைகளை வீரர்களுக்கு போர்த்தி ஒவ்வொரு வீரர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். 


இலங்கை கடலால் சூழப்பட்ட தீவு ஆனால் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் எண்ணிக்கை மிக குறைவான அளவே காணப்படுகிறது. எம் பிள்ளைகள் இத் துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இது போன்ற போட்டிகள், பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் நாம் பல நிகழ்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்துறையிலும் ஈடுபடுத்த முன்வர வேண்டும்.

 இலங்கையின் விளையாட்டு துறையில் அதிகளவு வாய்ப்பு நீரால் கிடைப்பதற்கு இயற்கை எமக்கு தந்துள்ளது. அதனை நாம் சரியான பயிற்சிகள் மூலம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அதற்கான விழிப்புணர்வுக்காக இவ்வாறான நிகழ்வுகளை செய்து வருகிறோம்.

இப்போட்டிகள் SDG 03 இன் இலக்கை அடிப்படையிலும் செயல்படுத்தப்படுகிறது. SDG 3 என்பது "நிலையான வளர்ச்சி இலக்கு 3" என்பதன் சுருக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக 2015 இல் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட 17 இலக்குகளில் ஒன்றாகும். SDG 3 அனைத்து வயதினருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சுகாதார விளைவுகளை மேம்படுத்துதல், நோய்களின் சுமையைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

இந் நிகழ்வில் Tinco Aid சார்பில் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன், நிறுவனர் திரு. இராஜக்கோன் ஹரிகரன், நிகழ்ச்சி முகாமையாளர் திரு. சங்கரலிங்கம் நவநீதன் ஆகியோரும் திரு. நந்தன விஜயலால் (Yana Foundation Director), பயிற்சியாளர்கள், Trinco Blue Water Sports, பெற்றோர்கள், தன்னார்வலர்கள், படகு உதவியாளர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال