புல்மோட்டையில் யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்!


திருகோணமலை புல்மோட்டை பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை -புல்மோட்டை 04 ஜின்னா நகரில் தொடர்ச்சியாக யானையின் அட்டகாசம் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 03:30 மணியளவில் யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.

 இதை தடுப்பதற்காக சிலர் ஈடுபட்டு நிலையில் முன்னாள் தபால் ஊழியரான அப்துல்லத்தீப் அன்வர் (58வயது)  யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சில வீடுகளுக்குள் சேதங்களை ஏற்படுத்தி விட்டு ஒரு வீட்டை உடைத்து  நெல் மூட்டைகள் சிலதை தின்று சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த யானையின் அட்டகாசம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது இதனால் இன்னும் அட்டகாசம் தொடர்ந்தால் பல பாதிப்புகள் வரலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

சம்பவ இடத்தில் சடலம் இருப்பதாகவும் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்,  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

(புல்மோட்டை -ஆர்.ஜே.ஸாதிக்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.