திருகோணமலையில் நடமாடும் சேவை

 


வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை இன்று (26) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


இந்நடமாடும் சேவையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம், பதிவாளர் நாயக திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் வெளிநாட்டு அமைச்சு திணைக்களம் மற்றும் காணி அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து ஒபர் சிலோன்  ஏற்பாட்டில் இந்தியாவில் பிறந்தவர்களின் தூதரகப்பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியுரிமை சான்றிதழ் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டு பிறப்பு மற்றும் குடியுரிமை விண்ணப்பங்கள் பெறுவதற்கான பதிவுகள் இடம் பெற்றது.


இதன்போது நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜெயவிக்கிரம ஒபர் சிலோன்  தொண்டர் நிறுவனத்தின் தலைவி செல்வி சூரியகுமாரி ஆகியோர் நடமாடும் சேவையை பார்வையிட்டதுடன் மக்களின் பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்

.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.