கணவனை பிரிந்த மனைவி: கணவர் எடுத்த தவறான முடிவு-சிக்கியது கடிதம்!

 


திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசதுரை சுதாகரன் (27வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-குடும்ப  தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் குறித்த சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன்,பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.


இந்நிலையில் குறித்த மரணத்திற்கான காரணத்தை தான் தொங்கி இருந்த இடத்தில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget