ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்-கிழக்கு ஆளுநர்

 


ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் அதன் மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


கல்விமானி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை (23) திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். 

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபில்யூ.ஜீ.திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ்.ரத்நாயக்க, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரத்னம் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று வழங்கப்படும் நியமனத்திற்கு நான் தான் காரணம் என்று பொய்கூற நான் விரும்பவில்லை. இந்த நியமனத்திற்கான ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டது. எனினும், இன்று நியமனம் பெறும் ஆசிரியர்கள் மனத்திருப்தியுடன் சேவையாற்ற வேண்டும் என்ற வகையில் இதில் நான் தலையிட்டுள்ளேன். 

இயன்ற வரை சகலருக்கும் அவர்களது இருப்பிடத்திற்கு அண்மையில் உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். நீங்கள் பெறுகின்ற சம்பளத்தில் அதிகமானவற்றை போக்குவரத்துக்கும், இதர செலவுகளுக்கு செலவு செய்தால் மனமகிழ்வுடன் கற்பிக்கும் சூழ்நிலை வராது என்பதால் இந்த அறிவுறுத்தலை வழங்கினேன். 

இன்று காலையிலும் சகல நியமனங்களையும் பரிசீலனை செய்தேன். சிலருக்கு தூர இடங்கள் இருப்பது போல் தெரிகின்றது. அவ்வாறானவர்கள் உரிய அதிகாரிகளை சந்தித்து அவர்களது இருப்பிடத்திற்கு அண்மையில் வெற்றிடமுள்ள பாடசாலையொன்றுக்கு நியமனத்தை மாற்றிக் கொள்ள முடியும். 

அதற்காக வெற்றிடம் இல்லாத பாடசாலைகளை நீங்கள் கொர முடியாது அதனைச் செய்யவும் முடியாது. எங்கு நியமனம் கிடைக்குமோ என்ற ஆதங்கத்தில் இங்கு நீங்கள் வருகை தந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் அனைவரும் மனத்திருப்தியோடு இங்கிருந்து செல்ல முடியும். 

இவ்வாறு உங்களுக்கு வசதியான பாடசாலைகளில் நியமனம் தருவதன் மூலம் உங்களிடமிருந்து முக்கிய பிரதியுபகாரம் எதிர்பார்க்கப்படுகின்றது. நீங்கள் ஒவ்வொரும் வருடாந்தம் 10 கல்விமானிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அந்த பிரதியுபகாரமாகும். இதனை நீங்கள் அனைவரும் மனதில் இருத்தி செயற்பட வேண்டும் 


இதன்போது 55 கல்விமானி பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணத்தில்  ஆசிரியர் நிமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget