கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலையிலுள்ள புகழ்பெற்ற சர்வமத ஆலயங்களுக்கு சென்று இன்று (18) விஷேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில் கடமையை பொறுப்பேற்க முன்னரே இன்றைய தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்து திரு கோணேஸ்வரா இந்து ஆலயம்- வில்கம் விகாரை பௌத்த விகாரை மற்றும் கிறிஸ்தவ ஆலயம், பள்ளி வாசல் போன்ற இடங்களுக்கு சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இருந்தபோதிலும் ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்க முற்பட்டிருந்த போதிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Premium By
Raushan Design With
Shroff Templates