திருகோணமலையில் மோதல் -பெண்ணொருவரின் கை துண்டிப்பு-அவசரமாக கொழும்பு செல்லும் அம்பியுலன்ஸ்

 


         (அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கோணேஷபுரி  பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் தாயும் மகளும் வால்வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (01)  மாலை இடம் பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவசர சத்திர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு வால்வெட்டுக்கு இலக்கான பெண் நிலாவெளி -கோணேஷபுரி SLRC  வீட்டு திட்டத்தில் வசித்து வரும் எஸ். சந்ரா ரஜினி (50 வயது) எனவும் தெரிய வருகிறது.

இதேவேளை குறித்த பெண்ணின் மகளான ஸ்ரீதரன் சந்திரிகா (30வயது) என்பவர் தாயை வாளால் வெட்ட முற்பட்டபோது  தடுக்க சென்றமையினால்  காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் துண்டிக்கப்பட்ட கையை பொருத்துவதற்காக அவசர அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அத்துடன் கைகலப்புடன் தொடர்புடைய பெண்ணொருவர் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை குறித்த வால்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال