திருகோணமலையில் வால்வெட்டு- மூவர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனடியாக வீடியோ வடிவில்  தெரிந்து கொள்ள Trincolive யூடியுப் பக்கத்திற்கு செல்லவும். பெல் பட்டனை அழுத்தவும்.மற்றவர்களுக்கும் செயார் செய்யவும்.         


          (அப்துல்சலாம் யாசீம்)திருகோணமலையில் வால்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உப்புவெளி பொலிஸ் பிரிவு உட்பட்ட சோலையடி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற  வாக்குவாதம் கைகலப்பாக மாறியதிலேயே இச்சம்பவம் இன்று (29)  இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்தில்  மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலொன்றின்  உரிமையாளரான திருகோணமலை -செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர். முரளிதரன் (46வயது)  ஆர்.விஜேந்திரன் (49வயது) மற்றும் உப்புவெளி-சோலையடி பகுதியைச் சேர்ந்த பாக்கியராஷா செல்வா (51வயது) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

காயமடைந்த மூவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட குறித்த மூவரையும் உப்புவெளி பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டதுடன் தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.