Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

மஹதிவுல்வெவ பிரதேசத்தில் ஹோட்டலொன்றுக்கு  சீல் வைப்பு!

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றுக்கு இன்று (20) மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.



ஹொரவ்பொத்தானை சந்தைக்கு சென்று  வீசப்படுகின்றன மரக்கறிகளை கொண்டு வந்து சமைப்பதற்கு பயன் படுத்தி வருவதாகவும், சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் குறித்த ஹோட்டலை சோதனையிட்டபோது ஹோட்டலுக்கு பின்னால் வெவ்வேறாக  மரக்கறி வகைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மரக்கறிக்கு மேலால் நாய் உறங்கிக் கொண்டிருப்பதை அவதானித்ததாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


வீடியோ பார்க்க Trincolive யூடியுப் பக்கத்திற்கு செல்லவும் 


அத்துடன் பாவணைக்கு பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.





No comments