(பதுர்தீன் சியானா )
மொரவெவ சிவில் சமூக அமைப்பினால் இன்று (13) சிவில் சமூக அமைப்பின் பொறுப்புகளும் கடமைகளும் பற்றிய செயலமர்வு அமைப்பின் தலைவர்
அப்துல்சலாம் யாசீம் தலைமையில் நடைபெற்றது.
மஹதிவுல்வெவ விஜயராஜ விகாரையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அறுபதுக்கு மேற்பட்ட சமூக சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவன இணையத்தின் தலைவர் டொக்டர் ரவிச்சந்திரன் வளவாளராக கலந்து கொண்டதுடன் AHRC அமைப்பின் பிரதிநிதிகளும் இச்செயலமர்வில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பின் ஊடாக இனங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதுடன், இளைஞர் யுவதிகள் மத்தியில் சர்வ மத போதனைகள் தொடர்பாக அறிவூட்டல்களை வழங்குவதேயாகும்.
No comments