தகவலறியும் சட்டம் குறித்தான தெளிவூட்டல் செயலமர்வு

 


(அப்துல்சலாம் யாசீம்)


தகவலறியும் சட்டம் குறித்தான தெளிவூட்டல் செயலமர்வு இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தகவலறியும் சட்டம் குறித்து ஓரளவு தெளிவு விடயதான உத்தியோகத்தர்களுக்கு காணப்பட்டபோதும் பிரயோக ரீதியாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தெளிவொன்றை பெற்றுக்கொள்ள இச்செயலமர்வு ஏதுவாக அமையுமென்று இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


வெளிப்படைத்தன்மையான அரசபொறிமுறையை கட்டியெழுப்ப தகவலறியும் சட்டம் ஏதுவாக அமையும். மக்கள் நிதியில் இயங்கும் அரச நிறுவனங்கள் மக்களுக்கு அவசியமான தகவல்களை சரியாக வழங்குதல் வேண்டும். தகவல்கள் வழங்கல்களில் காணப்படும் வரையறைகளை பேணி இத்தகவல் வழங்கப்பட்ட வேண்டும் என இதன்போது மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரும் தகவல் உத்தியோகத்தருமான எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய  தெரிவித்தார்.

தகவல் சட்டத்தின் ஏற்பாடுகள், தகவலறியும் ஆணைக்குழு, தகவல் சட்டத்தின் முக்கியத்துவம் , பிரயோக ரீதியான அனுபவம் உள்ளிட்ட பல  விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டது.

மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் தவலறியும் உரிமைச்சட்டத்திற்குரிய விடயதானங்களை கையாளும் உத்தியோகத்தர்கள் இச்செயலமர்வின் பங்குபற்றுனர்களாக கலந்து கொண்டனர்.

இதற்கான அனுசரனையை இளைஞர் அபிவிருத்தி அகம் வழங்கியிருந்ததுடன் வளவாளர்களாக  ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்துறை மற்றும் கிளைகளின் தலைமை அதிகாரி இ. கெளரீஸ்வரன் மற்றும் அந்நிறுவனத்தின் சிரேஸ்ட்ட திட்ட உத்தியோகத்தர் பிரியதர்சினி போல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.