Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிண்ணியாவில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட கற்பிணிக்கு பிரசவம்!


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை- கிண்ணியா தள வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கற்பிணிக்கு மனிதாபிமான முறையில் பிரசவம் செய்த   சம்பவமொன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் 27 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவர்  பிரசவ வலி காரணமாக இன்று (12) கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அப்பெண்னுக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப் பட்டிருந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ .எம்.எம்.ஜிப்ரி  அவர்களின் வழிகாட்டலுடன் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் புன்சிரி குணதிலக்கவினால் பிரசவம் நடாத்தப்பட்டது.

கொவிட்- தொற்று  கர்ப்பிணிகள் கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டது முதல் தடவை எனவும்,கொரோனா ஆபத்திலும் மனிதாபிமான முறையில் செயற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்திய குழுவினருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் பொதுமக்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கோவிட் தொற்றுக்குள்ளான தாய் நலத்துடன் இருப்பதாகவும், கைக்குழந்தைக்கு ஓரிரு நாட்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கிண்ணியா தள வைத்தியசாலை  வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

No comments