திருகோணமலையில் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை- தேடும் பணியில் சக மீனவர்கள்

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து  கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லையென திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர்  சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.

இவ்வாறு கடலுக்குச் சென்றவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த  சஞ்சீவன் (21)
ஜீவரெட்ணம் சரன்ராஜ்(34)
சிவசுப்ரமணியம் நதுசன்(21) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில்  திருக்கடலூர் பகுதியிலிருந்து மூவர் கடலுக்குச் சென்றுள்ள நிலையில் அவர்கள் மூவரும் கரையொதுங்க வில்லையெனவும் மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இம்மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் படகுகளை தேடுவதற்காக  பத்திற்கும் மேற்பட்ட படகுகளை தேடுவதற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை கடற்படையினருக்கும், மீன்பிடி திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் தொடர்ந்தும் படகினை தேடுவதற்கு சக மீனவர்களின் படகுகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களைத் தேடி பல படகுகள் ஆழ்கடலுக்கு சென்றும் இவர்களை கண்டுகொள்ள முடியவில்லை எனவும் தெரியவருகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال