(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 83 தொற்றார்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ,இதுவரை 16 மரணங்கள் சம்பவித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று (06) காலை 10 மணி தொடக்கம் 4 மணி வரை 11 தொற்றாளர்கள் இனங்கணப்பட்டுள்ளதுடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 பேரும், சேருவில சுகாதார வைத்திய பிரிவில் இருவரும், தம்பலகாமம் பகுதியில் ஒருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை இன்று (06) 7.30 மணியளவில் தொலைபேசியில் கொரோனா பற்றிய விபரங்களை கேட்டறிந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 1720 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை 279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 16 மரணங்களும்,திருகோணமலை சுகாதார வைத்திய பணிமனைகுட்பட்ட பகுதியில் ஆறு பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேரும்,மூதூர் பிரதேசத்தில் இருவரும், கந்தளாயில் இருவரும், கிண்ணியாவில் ஒருவரும் இன்றுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா மேலும் குறிப்பிட்டார்.
No comments