கோமரங்கடவல பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேருக்கு கொரோனா!

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி நிரோஷன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை ஏற்கனவே கோமரங்கடவல பிரதேசத்தில் 27 பேருக்கு தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் கூறினார்.

அத்துடன் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையமாக திறக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال