சிறுவர்கள் இருவர் துஷ்பிரயோகம் -பௌத்த பிக்கு கைது

 


திருகோணமலை- கந்தளாய் பகுதியில்  பூசைக்கு சென்ற இரண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவரை நேற்றிரவு (06)  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தம்பலகாமம்- 96 ஆம் கட்டை  பகுதியைச் சேர்ந்த அக்ரபோதி விகாரை விகாராதிபதி கெமுனுபுர தம்ம ஹிமி (55வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் 96 ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள அக்ரபோதி விகாரைக்கு 12 வயது மற்றும் 14 வயது சிறுவர்கள் பூஜை வழிபாட்டுக்காக சென்ற போது பௌத்த பிக்கு தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவை கந்தளாய் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம்- பொலிசார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال