அங்கவீன சிப்பாய்க்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கோலாகல திருமணம்  

 


(அப்துல்சலாம் யாசீம்)


2009  ஆம் ஆண்டில்  இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, எல்.ரீ.ரீ.ஈ.  அமைப்புக்கு எதிராக கம்பீரமாக நின்று போராடிய சந்தர்ப்பத்தில் தனது இடது காலை பறிகொடுத்த பெலும்மார உடுகமவில் வசிக்கும் கொமாண்டோ படையணியின்  சிப்பாய் கோப்ரல் சம்பத் டயிள்யூ.பி.பி அவர்களின் திருமணம் பெலும்மஹர செனெத்ம மண்டபத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவான திருமணம் திங்கட்கிழமை (08)  இடம்பெற்றது. மணமகனின் திருமண பதிவின் சாட்சியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல்  ஷவேந்திர சில்வா கையொப்பமிட்டார்.  

இத்திருமணம்  இராணுவ புனர்வாழ்பு  பணிப்பக பணிப்பாளர் மேஜர் ஜெனரல்  ஷிரான் அபேசேகர அவர்களின் ஆலோசணையின் பேரில்  சியனேவ அபி எனும் அமைப்புடன் இணைந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கோப்ரல் சம்பத் டயிள்யூ.பி.பி. 2007 ஆம் ஆண்டில்  இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், மனிதாபிமான நடவடிக்கைகள் உச்சகட்டத்தை  அடைந்திருந்த போது 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ம் திகதி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இடது கால் இழக்கப்பட்டது. 

இத்திருமணத்தின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா  அங்கவீன இராணுவ வீரர் சார்பில் கலந்து கொண்டார். சுகாதார அறிவுறுத்தல் காரணமாக  மணமக்கள் சார்பில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுடன் திருமண நிகழ்வு நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி பிரதம விருந்தினர் பெறுமதியான பரிசும் வழங்கி வைத்தார்.   கோப்ரல் சம்பத் டயிள்யூ.பி.பி.என்ற சிப்பாய் 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் படகோட்டுதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டமை  குறிப்பிடத்தக்கது. 


‘காதல் அனைவரையும் வெல்லும் என்ற வகையில், செல்வி நிலுஷா குமுதுனி தனது தாயிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் தேவையான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், தனது வருங்கால கணவனை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக கவனித்துக்கொள்வதாக அவரது  பெற்றோருக்கு உறுதியளித்தார். இத்திருமணத்தில் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களும் இடம்பெற்றன. 

மறுவாழ்வு பணிப்பகம் மற்றும் கொமாண்டோ படையணி ஆகியவற்றின்  ஒருங்கிணைப்புடன் மணமக்கள் அலங்கரிப்பு முதலான அனைத்து திருமண ஏற்பாடுகளையும் மேற்கொண்ட இத்திருமணத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார உள்ளடங்களான சிரேஸ்ட அதிகாரிகள்,  முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் கொமண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்‌ஷ, நிறைவேற்று நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க, புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர  ஆகியோரும் கலந்துகொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.