ஹொரவ்பொத்தானை விபத்தில் மாணவன் மரணம்- சாரதி கைது




ஹொரவ்பொத்தானை-கபுகொல்லாவ பிரதான வீதியில்   பஸ்சுடன் ,மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (11)  பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் ருவன்வெளி மத்திய மகாவித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்று வந்த ஹொரவ்பொத்தானை-01ம் கட்டை மொரகொட ,மூதலான பகுதியைச் சேர்ந்த ஆர் எம் கே எம்.த.சில்வா (21வயது) எனவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-ஹொரவ்பொத்தானையிலிருந்து வாகொல்லாகட பகுகுதிக்கு மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்த மாணவன் உழவு இயந்திரம் மற்றும் கெப் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பஸ் சாரதியின் அசமந்தப் போக்கினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சாரதியை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிசார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال