திருகோணமலை மாவட்டத்தில் கடந்த வருடம் யானைகளின் தாக்கத்தினால் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 61 பேருக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் நடைபெற்றது.
யானைகளின் தாக்கத்தினால் உயிராபத்து,அங்கவீனம், உடமையழிவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.இவற்றிலிருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க மாவட்டத்தின் பல பிரதேசங்களில் யானைவேலிகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.