திருமலையில் மேலும் வங்கி ஊழியரொருவருக்கு கொரோனா!

 


தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் 24 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.


திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் இன்று (07) மாலை இத்தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.

திருகோணமலை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றி வந்த 24 வயதுடைய இளைஞனுக்கு அன்டிஜன்  பரிசோதனை  மேற் கொள்ளப்பட்ட போதே உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை நகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வோர்களை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கைது செய்யப்படும் நபர்களுக்கு கட்டாயம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.