திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்புபாடசாலைக்கு மீண்டும் செல்வோம்.... மகிழ்ச்சிகரமான கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினல் 100 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று  மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் தலமையில் உப்புவெளி சர்வோதய கோட்போா் கூடத்தில் இடம்பெற்றது. 


கோவிட்-19 சுகாதார நடைமுறைக்கு அமைவாக இடம்பெற்ற  இந்த நிகழ்வில் மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை தோல் பை, எழுது கருவிகள், குடிநீர் போத்தல்கள் உள்ளடக்கிய இரண்டாயிரம் ரூபாய் பெறுமதி கொண்ட  100 கற்றல் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 


கோவிட்-19 அசாதாரண சூழ்நிலைகளினால் முடக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து மாணவர்களை தெரிவு செய்து அவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவதை  நோக்காக் கொண்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டதாகவும் கோவிட்-19 பரவலை எதிர்கொண்டு ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய கற்றல் செயற்பாடுகளை புதிய ஆண்டிலிருந்து தொடர வேண்டும் என்றும் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் இதன் போது தெரிவித்தாா். 


இந்த நிகழ்வில் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உபதவிசாளர் ஏ.எம். நெளபர், திருகோணமலை YMMA மாவட்ட  பணிப்பாளர் எம். எம். முக்தாா், மக்கள் சேவை மன்றத்தின் உத்தியோகத்தர்கள், பெற்றோ்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.