திருகோணமலை- டைக் வீதியில் 17 புதிய தொற்றாளர்கள்


 (அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட  டைக்  வீதியில் 17 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில்  இன்று (24) ஞாயிற்றுக்கிழமை 25 நபர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை  டைக் வீதியிலுள்ள மக்களை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேறு இடத்தில் இருந்து செல்பவர்கள் உள் நுழைய வேண்டாம் எனவும் சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இருந்தபோதிலும் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال