திருகோணமலையில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு COVID 19 உபகரணங்கள் வழங்கி வைப்பு!

 


திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.


கொரோனா அசாதாரண நிலையில் மாவட்டத்தில்   ஊடகப்பணியை மேற்கொண்ட ஊடகவியலாளர்களுக்கே இப்பொருட்கள் அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது.

தாம் மாவட்ட மட்டத்தில் இற்றைவரை உரிய பாதுகாப்பு பொருட்கள் இன்றி ஊடகப்பணியை மேற்கொள்வதாகவும் உரிய சுகாதாரப்பாவணை பாதுகாப்பு பொருட்களை வழங்க உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டுவந்ததை இட்டு இப்பொருட்களை வழங்க அரசாங்க அதிபர் உரிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.


ஊடகவியலாளர்கள் பல்வேறு அசாதாரணநிலையின்போது அவதானத்தையும் பொருட்படுத்தாது தமது பணியை மேற்கொண்டு வருவதாகவும் ஊடகவியலாளர்களின் நலனை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நிவர்த்திக்க ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர்.மக்கள் நலன் மற்றும் நாட்டு நலனுக்கு பங்கம் ஏற்படுத்தும்   செயற்பாடுகளை ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர்கின்றனர்.ஆக்கபூர்வமான மற்றும் பங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை உரிய தரப்பிற்கு எடுத்துரைப்பதுடன் நடுநிலையாகவும் தார்மீக பொறுப்புடன் செயற்படுவது இன்றியமையாயதது என்றும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதியுதவியில் இப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இதன்போது அடிப்படை உரிமைகள் மற்றும் பால் சமத்துவம்  தொடர்பான விளக்கவுரையொன்றும் சட்டத்தரணி பிரசாந்தி உதயகுமாரினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன் ,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கே.லவகுசராசா உட்பட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget