புராவி' வருவதற்கு முன்பு, கிழக்கு ஆளுநர் கடலோர மக்களின் கிராமங்களை பார்வையிட்டார்!


(அப்துல்சலாம் யாசீம்)

 மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று காலை திருகோணமலையின் வடக்கு கடற்கரையோரம் உள்ள பல கிராமங்களுக்கு விஜயம் செய்து புராவி சூறாவளியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மக்களை இடம்பெயர்வது குறித்து ஆய்வு செய்தார்.

அதன்படி, திருகோணமலை வடக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள சிறிமாபுர மற்றும் திருக்கடலூர் கிராமங்களை ஆளுநர் ஆய்வு செய்தார்.


இப்பயணத்தின் நோக்கம், அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை சூறாவளியால் ஏற்படக்கூடிய பேரழிவுகளிலிருந்து முன்கூட்டியே மீட்பது மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை வழிநடத்துவதாகும்.இதுபோன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் மக்கள் எங்கிருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆளுநர் இப்பகுதிக்கு வருவது இதுவே முதல் தடவை எனவும் மக்கள் தெரிவித்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.