மனிதாபிமான உதவிகளை கோரும் ஜமாலியா மக்கள் (வீடியோ இணைப்பு)

 


திருகோணமலை நகர எல்லைக்குட்பட்ட ஜமாலியா லவ்லேன் துளசிபுரம் தக்வா நகர் ஜின்னா நகர் முற்றாக முடக்கம்.

கொவிட் 19 கொரோனா தொற்று சிலருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால்  முருகா புரி , அபயபுர .ஜின்னாநகர் ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகள் கடந்த 20 ஆம் திகதி முதல் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 இதனால் ஜமாலியா கரையோர மீனவர்கள் 500 குடும்பங்கள் இதர பகுதிகளிலுள்ள மேலும் 500 குடும்பங்களைச் சிறந்தவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.


 தனிமைப்படுத்தப்பட்ட 36 குடும்பங்களுக்கு மாத்திரம் அரசினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன ஏனயவர்களுக்கு அத்தியாவசிய உணவு தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஜமாலியா ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அவசரகால வேலைத் திட்டத்தின் கீழ் மனிதாபிமான  உதவிகளை வழங்குவதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.

இதற்காக உதவுபவர்கள் ஜமாலியா நம்பிக்கையாளர் சபை பொருளாளர் ஏ.எல்.றபாய்தீன் 0712140780 தலைவர் அல்ஹாஜ் கமர்தீன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும். 

மேலதிக விபரங்களுக்கு TRINCO MEDIA ஊடக வலையமைப்புடன் தொடர்பு கொள்ளவும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.