சமூக பணிகளில் ஈடுபடும் குளோபல் இஹ்சான் ரிலீப் நிறுவனம்!

 
(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.

தம்பலகாம பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான பால்மா பொதிகள் பிரதேச செயலாளரின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டடது.

இதேவேளை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பொதிகளை சர்வதேச தொன்டு நிறுவனத்தின் இலங்கைக்கான குளோபல் இஹ்சான் ரிலீப் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் முகம்மது ஜறூக் அவர்கள் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதுடன் பிரதேச செயலாளர் சிறீபதி அவர்களும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.