திருமலையில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட ஜமாலியா,துளசிபுரம், சிறிமாபுர போன்ற பகுதிகளுக்கு குச்சவெளி பிரதேச சபையினால் உளர் உணவுப் பொதிகள் (28) வழங்கி வைக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட ஜமாலியா மற்றும் சிறிமாபுர  மக்கள் கடற் தொழிலை  மையமாக கொண்டு தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்த வேளையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அன்றாடத் தேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இந்நிலையில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ. முபாரக் அவர்களினால் அம்மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இதன்போது திருகோணமலை நகரசபை உறுப்பினர் ஜனாப் மௌசூம்  மாஸ்டர், பிரதேச சபையின் நிதி பிரிவின் உத்தியோகத்தர், பள்ளி நிர்வாக சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.