(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா பரவி வருவதாக முகநூல் ஊடாக பல தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்த நிலையில் இதன் உண்மைத்தன்மை பற்றி தொலைபேசி மூலம் இன்றிரவு (20) 11.45 மணியளவில் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து கிண்ணியாவிற்கு வருகை தந்த அண்ணல்நகர் மற்றும் ஹிஜ்ரா வீதி போன்ற பகுதிகளில் வசித்து வரும் 24 மற்றும் 47 வயதுடைய இருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் ஜமாலியா துளசி புரம் பகுதிகளைச் சேர்ந்த 15 பேர் இனங்காண பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது 42 பேர் இதுவரை இனங் காணப்பட்டுள்ளதாகவும் 2400 க்கும் மேற்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.