திருமலை- ஜமாலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா

 


(அப்துல்சலாம் யாசீம்)


தற்போது கிடைத்த செய்தி -திருகோணமலை ஜமாலியா பகுதியில் இறைச்சிக் கடை விற்பனையாளருக்கு கொரோனா தொற்று  உறுதி  செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது உறவினர்கள் 13 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (20)  மாலை மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகவலை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.