பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

 


(பதுர்தீன் சியானா)


திருகோணமலை-மொரவெவ  பிரதேசத்தில் பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாயலில் இன்று (23)  வழங்கி வைக்கப்பட்டது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பெற்றோரை இழந்த சிறார்களுக்கு இத்திட்டம் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.அமான் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மொரவெவ பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் மற்றும் மௌலவி ஜனூதீன், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال